மறைந்த அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களிடம் அவர் பேசும் போது, “எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் அவர் வலது கையாக இருந்தவர், அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து வாழ்ந்தவர் வீரப்பன். எனக்கும் அவருக்குமான நட்பு, மிக ஆழமானது மற்றும் புனிதமானது. என் வாழ்நாளில் அவரை மறக்கவே முடியாது” என்றார்.