சென்னையில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடெமியில் இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்த 27 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் தேர்வு உள்ளிட்ட இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்கு கட்டணம் இல்லாமல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அதன்படி இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் 12 மாத கால பயிற்சி முகாமில் வழங்கப்படும். இதில் 10, 12, பட்டப் படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எனவே விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் ஜாதி சான்றிதழ் நகலையும் இணைத்து அகாதெமிக்கு 2165, எல்.பிளாக், 12வது பிரதான சாலை அண்ணாநகர் என்ற முகவரியில் நேரடியாக அல்லது மின்னஞ்சல் மூலம் பிப்ரவரி 2 நாளை முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 91504 66341 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.