தமிழகத்தில் நாளுக்கு நாள் காய்கறி விலை உயர்ந்த வரும் நிலையில் தற்போது அரிசி விளையும் ஏற்றம் கண்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் நெல் விளைச்சல் குறைந்துள்ளது.

அதன் எதிரொலியாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் அரிசி வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அரசு விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்துள்ளது. இட்லி அரிசி மற்றும் சாப்பாட்டு அரிசி கிலோவுக்கு ஐந்து ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அரிசியின் தரத்தை பொறுத்து அனைத்து மூட்டைகளும் 100 முதல் 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது