SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல….. அடுத்த வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் பிஜேபி கட்சி உடன் அனைத்திந்திய முன்னேற்றக் கழகம் கூட்டணி இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன். இங்கே கூட பேசுகிற பொழுது சொன்னார்கள்.

SDPI  கட்சியும்,  அண்ணா திமுகவும் எதிர்காலத்தில் மிகச் சிறப்பாக மக்கள் பணி செய்வதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது என்று சொன்னார்கள், அது உண்மை.  SDPI கட்சியும்,  இன்னும் பல கட்சிகள் வர இருக்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, இங்கே வந்திருக்கின்ற சிறுபான்மை மக்களினுடைய ஆதரவோடு….. மேடையிலே வீற்றுருக்கின்ற  சிறுபான்மை மக்களினுடைய தலைவர்கள் ஆதரவோடு…. வெற்றி பெற்று நாடாளுமன்ற தேர்தலிலும் 40க்கு 40 இடங்களில் நாம் வெல்வோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்று…. நம்முடைய கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று…..  நாடாளுமன்றத்திலே மக்களுடைய பிரச்சினையை எழுப்புவார்கள். தமிழ்நாட்டு மக்கள் அவர்கள் வளம் பெற வேண்டும் என்றால், அதற்க்கு  தேவையான நிறைய பெறுவதற்கு நாங்கள் போராடுவோம்.  நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கு புதிய புதிய திட்டங்களை கொண்டு வருவதற்கு கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து,  நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். தமிழ்நாடு தான் நமக்கு தாய் நாடாக விளங்கிக் கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.