தமிழகத்தில் பொது மக்களுக்கு அரசு ஏராளமான உதவிகளை வழங்கி வருகின்றது. அதன்படி அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு உங்களை தேடி உங்கள் ஊரில் இருந்த புதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. அதாவது அனைத்து கிராமங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கிய பொது மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும்.

சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மாதம் தோறும் நான்காவது சனிக்கிழமை முகாம் அமைக்கப்பட்ட ஒரு நாள் முழுவதும் அதிகாரிகள் அங்கு தங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிய வேண்டும். காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை இந்த முகாம் நடைபெறும் எனவும் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இந்த முகாம் மூலம் அதிகாரிகளிடம் கேட்டு குறைகளை நிவர்த்தி செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதற்கான நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு உங்களுக்கான குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.