மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த தனது நண்பனுக்கு, இளைஞர் ஒருவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றிய விதம் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளது. “நீ மட்டும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து ராணுவ உடை அணிந்து வந்தால், உன்னை என் தோள்களில் சுமந்து ஊர் முழுவதையும் சுற்றி வருவேன்” என்று அந்த இளைஞர் தனது நண்பனிடம் முன்பே சபதம் செய்திருந்தார். தற்போது அந்த நண்பன் ராணுவத்தில் தேர்வாகி சீருடையுடன் ஊருக்குத் திரும்பியதும், சொன்னபடியே அவரைத் தனது தோளில் சுமந்து ஊர் வீதி எங்கும் கொண்டாட்டத்துடன் வலம் வந்துள்ளார்.

​இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அந்த கிராமத்தையே உற்சாகத்தில் ஆழ்த்தியது. நண்பனின் கடின உழைப்பையும், நாட்டின் மீதான அவனது தேசப்பற்றையும் கௌரவிக்கும் விதமாக இந்த இளைஞர் செய்த செயல், உண்மையான நட்பிற்கு உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது இந்தப் புகைப் படங்களும் வீடியோக்களும் “நட்புன்னா இதுதான்” என்கிற கேப்ஷனுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது. ராணுவ வீரர்களுக்குக் கிடைக்கும் இந்த உயரிய மரியாதை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.