உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஆர்யாவர்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோது, மருத்துவர்கள் அவரது வயிற்றைக் கிழித்துவிட்டு, பாதியிலேயே அறுவை சிகிச்சையை நிறுத்திவிட்டு மீண்டும் தையல் போட்டுள்ளனர்.

மேலும் நோயாளிக்குத் தேவையான முறையான சிகிச்சை அளிக்காமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சையை அரைகுறையாக கைவிட்டது குடும்பத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்களின் இந்த பொறுப்பற்ற செயலால் அந்த முதியவரின் உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் காவல் துறையிடமும், மாவட்ட மருத்துவ அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட மீரட் சி.எம்.ஓ டாக்டர் அசோக் கட்டாரியா, இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.