உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற முறையில் வாலிபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிவாடா கிராமத்தைச் சேர்ந்த நஜ்ரான், நாஜிம் மற்றும் முஃபித் ஆகிய மூன்று பேர் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரைத் தனி இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அந்த வாலிபரை நிர்வாணப்படுத்திய கும்பல், அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதோடு நிற்காமல், அந்த வாலிபரின் அந்தரங்க உறுப்பில் பெட்ரோல் ஊற்றி, குச்சியை வைத்துத் துன்புறுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலின் போது, அந்த வாலிபர் தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தனது தாய் மற்றும் இறைவன் மீது சத்தியம் செய்து கதறி அழுதுள்ளார்.
இருப்பினும், அந்தப் புகாரைப் பொருட்படுத்தாத கும்பல், இந்த முழுச் செயலையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி காவல்துறையின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர்கள் உடனடியாகச் செயல்பட்டு நஜ்ரான், நாஜிம் மற்றும் முஃபித் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட குச்சியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
