வெப்பமண்டலக் கடல்களில் திமிங்கலங்கள் தங்கள் குட்டிகளுக்குப் பாலூட்டும் அரிய மற்றும் அற்புதமான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலங்கள், மனிதர்களைப் போலவே தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுத்து வளர்க்கின்றன. இருப்பினும், கடலுக்கு அடியில் இது எவ்வாறு சாத்தியம் என்பது பலருக்கும் வியப்பாக இருக்கலாம்.

மேலும் வைரலாகி வரும் இந்தக் காணொளியில், தாய் திமிங்கலம் கடலில் நீந்திக் கொண்டிருக்கும்போதே அதன் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் விதம் மிகத் தெளிவாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது, இது இயற்கை அன்னையின் அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Afshine Emrani MD, FACC (@afshineemrani)

“>

இதனால் திமிங்கலங்களின் பால் மிகவும் அடர்த்தியானது, கிட்டத்தட்ட பற்பசை போன்ற பதத்தில் இருக்கும். இதில் அதிகப்படியான கொழுப்புச் சத்து உள்ளதால், அது தண்ணீரில் கரையாமல் நேரடியாகக் குட்டியின் வாய்க்குச் சென்றடைகிறது.

இந்த திமிங்கலங்களுக்கு மனிதர்களைப் போன்ற காம்புகள் கிடையாது, மாறாக ‘மெமரி ஸ்லிட்ஸ்’ எனப்படும் பிளவுகளின் வழியாகவே அவை பாலை வெளிப்படுத்துகின்றன. கடலின் ஆழத்தில் நிகழும் இந்த அற்புதமான நிகழ்வு, இயற்கையின் தகவமைப்புத் திறனை உலகுக்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இக்காணொளியைக் கண்ட இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.