இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கேஸ் சிலிண்டர் காலியாகும் போது ஆன்லைன் மூலமாக எளிதில் புக் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், மொபைலை மற்றும் வாட்ஸ் அப் மூலமாக கேஸ் சிலிண்டர் எப்படி புக் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

அதன்படி Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண்ணுக்கு Book அல்லது Refill என டைப் செய்து மெசேஜ் அனுப்பியதும்  உங்களுக்கு எந்த தேதியில் கேஸ் டெலிவரி செய்யப்படும் என்ற விவரம் அனுப்பப்படும். அடுத்து  HP கேஸ் வாடிக்கையாளர்கள் 92222 01122 என்ற எண்ணுக்கும்,  Bharat Petroleum சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 1800224344 என்ற எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி சிலிண்டரை புக் செய்யலாம். மேலும் Paytm, PhonePay, Google pay மூலமாகவும் புக் செய்யலாம்.