இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் போனஸ் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது கர்நாடக அரசு தனது ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அடுத்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமல்படுத்துவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மாநில அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் அகலவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2.5 அரசு பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கர்நாடகா உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.