சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகள் இல்லாத வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்த திருடன் சிறுமியால் காவல்துறையினரிடம் சிக்கிய சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

குற்ற வரலாறு: தீபக் வைஷ்யா என்பவருக்கு  எதிராக செம்பூர், மும்பை தியோனார் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடியதற்காக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த திருட்டுகள் 2011 to  2019 க்கு இடையில் நிகழ்ந்தன, இதற்கிடையில் காவல்துறையினரிடம் சிக்காமல் அவர் தப்பி வந்துள்ளார்.

நடவடிக்கையில் மாற்றம் : ஜூலை 2022 இல் ஒரு திருட்டின் போது சிசிடிவி கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்ட பிறகு, தீபக் வைஷ்யா தனது அணுகுமுறையை மாற்றினார். Cctv இல்லாத வீடுகளை குறி வைத்து அவர் தனது நேரத்தை  மாற்றி, மதியம் 12:30 முதல் 2:30 மணி வரை வீடுகளை குறிவைக்கத் தொடங்கினார் (அப்போது மக்கள் குறைவான விழிப்புணர்வுடன் மெத்தனமாக இருப்பார்கள் என்பது அவரது நம்பிக்கை).

11 வயது சிறுமியின் உதவி: கடந்த அக்டோபர் 13ஆம் தேதி அந்தேரி கிழக்கில் பூட்டப்படாத வீட்டில் ₹2.4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய தீபக் வைஷ்யா வை  அருகில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளில், பதினோரு வயது சிறுமி ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில்,  மர்ம  நம்பர் வீட்டிற்குள் சென்று வெளியே வருவதை கண்டு அவரது அங்க அடையாளங்களை நன்கு கண்டுகொண்டு அதை காவல்துறையினரிடம் துல்லியமாக தெரிவித்துள்ளார். 

சிசிடிவி காட்சிகள் மற்றும் அடையாளம் காணல்: சமீபத்தில் நடந்த திருட்டுகளின் அருகாமையில் இருந்து சிசிடிவி காட்சிகளை காவல்துறை அதிகாரிகள் சேகரித்து சிறுமியுடன் பகிர்ந்து கொண்டனர். அவர் பதிவுகளில் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் கண்டு, காவல்துறைக்கு பெரும் உதவியாக செயல்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை: உள்ளூர் உளவுத்துறை தகவல்களுடன், ஒரு போலீஸ் குழு ஒன்றை அமைத்து வைஷ்யாவை அந்தேரி ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.

வாக்குமூலம் மற்றும் மீட்பு: கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்த பிறகு 13 திருட்டுகளில் ஈடுபட்டதாக  வைஷ்யா ஒப்புக்கொண்டார். அதன்படி அவரிடமிருந்து ரூ 25 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கநகைகளை மீட்டுள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் இது குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.