உத்தராகண்டில் உள்ள ரிஷிகேஷில், குருகிராமைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஷுபம் சவுத்ரி தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தனது மனைவியின் செயல்களை கண்காணிக்க தனியார் துப்பறியும் நிறுவனத்தை அமர்த்தினார். இந்த ஆண்டு திருமணமான அவரது மனைவி ஆன்லைனில் ஒரு சுத்தியல் வாங்கியதை அறிந்து, அவருக்கு சந்தேகம் இன்னும் வலுவானது. இதனிடையே விசாரணையில், அவரது மனைவி தனது காதலனை ரிஷிகேஷில் உள்ள டபோவனில் ஒரு ஹோட்டலில் சந்தித்தது தெரியவந்தது. உடனடியாக ஷுபம் காவல்துறையை அழைத்து, தனது மனைவியை கையும் களவுமாக பிடித்தார்.

காவல்துறை அதிகாரி லக்ஷ்மி பந்த் தலைமையில், அதிகாலை 4 மணியளவில் ஹோட்டல் அறை எண் 202-ஐ சோதனையிட்டபோது, ஷுபமின் மனைவி மற்றும் அவரது காதலன் ஆட்சேபகரமான நிலையில் இருந்தனர். விசாரணையில், காதலன் ஷுபமை பல நாட்களாக பின்தொடர்ந்ததாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் ஹோட்டலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஷுபம் தனது மனைவி அல்லது அவரது காதலன் மீது புகார் அளிக்கவில்லை, மாறாக அவர்களுடனான உறவை முறித்துவிட்டு ஹோட்டலை விட்டு வெளியேறினார். இதனால், காவல்துறை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.