ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் உள்ள மாடல் டவுனில், 33 வயது பெண்ணை அவரது 18 வயது தம்பி ஹசன்ப்ரீத், குறுகிய ஆடைகள் அணிந்ததற்கும், அவரது குணநலன் குறித்து சந்தேகம் கொண்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, மரதந்தால் ஆன துணி துவைக்கும்  மட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் திங்கட்கிழமை நடந்தது.

புன்ஜாப் மாநிலம் மன்சா மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா, 2016-ல் சிர்சா மாவட்டத்தின் சுச்சான் கிராமத்தைச் சேர்ந்த ராய் சிங்குடன் காதல் திருமணம் செய்து, ஃபதேஹாபாத் மாடல் டவுனில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

திங்கட்கிழமை அவரது வீட்டிற்கு வந்த ஹசன்ப்ரீத், சகோதரியின் ஆடை மற்றும் குணநலன் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மர மட்டையால் தலையிலும், உடலிலும் பலமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராதிகா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராதிகாவின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது, குற்றவாளி ஹசன்ப்ரீத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக சிவில் மருத்துவமனையில் சேர்த்தனர், ஆனால் அவரது நிலைமை மோசமாக இருந்ததால், ஆக்ரோஹாவிற்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சையின்போது அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஃபதேஹாபாத் நகர காவல் நிலைய அதிகாரிகள், உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

காவல் நிலைய பொறுப்பாளர் சுரேந்திரா, “குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்த சம்பவம், குடும்ப உறவுகளில் நம்பிக்கையின்மையும், பெண்களின் உரிமைகள் மீதான அத்துமீறலும் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதை எடுத்துக்காட்டுகிறது.