மேற்கு வங்க மாநிலம் பாருய்பூர் பகுதியில், 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியுள்ளது. குளத்தில் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அந்த சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவள் உயிருடன் இருக்கும்போதே மூட்டையில் கட்டி குளத்தில் வீசப்பட்டதால், மூச்சுத்திணறியும் தண்ணீரில் மூழ்கியும் உயிரிழந்தாள் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முதன்மை குற்றவாளியின் நெருங்கிய உறவினர் ஒருவரை அடித்துக் கொன்றனர். இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற திரிணாமுல் காங்கிரஸின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர் சயோனி கோஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரிதப்ரதா பானர்ஜி ஆகியோரை, “கோ பேக்”, “துரோகி” என முழக்கமிட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு வாக்காளர்களின் நினைவு வந்ததா? என்றும், “எத்தனை ரூபாய்க்கு விலை போனீர்கள்? என்றும் உள்ளூர் பெண்கள் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியாக, கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட தாயைச் சந்தித்த சயோனி கோஷ், குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கப் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.
पश्चिम बंगाल के बारुईपुर में सायोनी घोष का स्वागत “बेईमान” और “कितने में बिकीं” जैसे नारों के साथ किया गया।
BJP ने उन्हें NCPI में शामिल कराकर कहीं का नहीं छोड़ा है।
BJP-मोदी 2029 तक बिल पास कराने के लिए उनका इस्तेमाल करेंगे, उसके बाद वे कहीं के नहीं रहेंगे। pic.twitter.com/BES9HbTuon
— Dinesh Purohit (@Imdineshpurohit) July 7, 2026
