இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி தனது சர்வதேச டி20 வரலாற்றுப் பக்கங்களிலேயே மிக மோசமான 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை விட, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் எடுத்த ஒரு மோசமான பேட்டிங் வரிசை முடிவு, முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்கை கடுமையாக கொதித்தெழச் செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, வெறும் 52 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஸ்பெஷலிஸ்ட் ஆல்-ரவுண்டரான சிவம் துபேவை களமிறக்காமல், அவருக்கு முன்னதாக பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை 7-வது விக்கெட்டாக களம் இறக்கியது இந்திய நிர்வாகம்.
Gautam Gambhir coaching has became an international disgrace now…
Dinesh Karthik was criticizing GG for sending Harshit over Dube…
and the foreign commemorator beside him looks to having fun with it
his hand gesture cleared all the things…this is really shameful.. IYER… pic.twitter.com/Yimm5XhDDO
— Mr. Wolf (@_aarkaa__) July 7, 2026
இதைப் பார்த்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் கம்மெண்ட்ரி பாக்ஸில் இருந்த தினேஷ் கார்த்திக் தனது பொறுமையை இழந்து நேரலையிலேயே விளாசினார். “நீங்கள் என்ன விளையாடுகிறீர்களா? சிவம் துபேவுக்கு முன்னால் ஹர்ஷித் ராணாவா? இதை என்னால் நம்பவே முடியவில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில் விளையாட துபே மீது அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கை இல்லையா? அவருக்கு முன்னால் ராணாவை புரோமோட் செய்தது எந்த விதத்தில் நியாயம்? இது மிக மோசமான அணுகுமுறை” என கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் வியூகங்களை வெளுத்து வாங்கினார்.
.தினேஷ் கார்த்திக் சொன்னது போலவே இந்திய அணி 11.4 ஓவர்களில் வெறும் 76 ரன்களுக்கு ஒட்டுமொத்தமாக சுருண்டது. மேலும் இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டத்தால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என பின்தங்கி, மானத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
