தமிழகத்தில் மருத்துவ இடங்கள் குறைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தவெக அரசுக்கு ‘வி தி லீடர்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் இடங்கள் குறைக்கப்பட்டதால், மருத்துவக் கல்வி பயிலக் காத்திருக்கும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் இந்த பாதிப்பு குறித்துத் தங்களது சந்தேகத்தை உறுதிப்படுத்திய தமிழக அமைச்சருக்கு அவர் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
எம்ஜிஆர் பல்கலைக்கழகம் தடையின்மை சான்றிதழ் வழங்காத ஒரு சூழலில், யுஜிசி விதிமுறைகளின்படி 60 நாட்களுக்குள் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
“இந்த மிகப்பெரிய நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பேற்பது? இது அதிகாரிகளின் வெறும் அலட்சியமா அல்லது அரசாங்கத்தின் நிர்வாகப் பிழையா?” என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்த ஒட்டுமொத்த குளறுபடிக்கும் தவெக அரசு உடனடியாகப் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து இதற்குக் காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
