வெள்ளப் பெருக்குக்கு நடுவே தனது காருக்கு ஆபத்து நேர்ந்த நிலையிலும், அதனைப் பிரிய மனமில்லாமல் உரிமையாளர் ஒருவர் காட்டிய அலாதி பாசம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தப்பியோடித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வழி இருந்தும், சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது டாட்டா நெக்ஸான்  காரை அந்த நபர் கைவிடவில்லை. ஆபத்தான அந்தச் சூழலிலும், காரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், தனக்கு உதவி தேடி வரும் வரை அவர் காரை விடாமல் பிடித்துக் கொண்டு அதனுடன் நின்ற காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

 

 

View this post on Instagram

 

A post shared by 𝐀𝐮𝐭𝐨 𝐗𝐩𝐫𝐞𝐬𝐬 𝐈𝐧𝐝𝐢𝐚 | Shorya Wadhwa (@autoxpress_india)

வெள்ளத்தின் கோரப் பிடியில் சிக்கியிருந்த காரையும், அதன் உரிமையாளரையும் மீட்கும் வரை அங்கேயே நீடித்த இந்த அரிய பாசப் போராட்டம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இக்கட்டான சூழ்நிலையிலும் தனது வாகனத்தின் மீது அவர் காட்டிய இந்த அசாத்தியமான பிணைப்பும், திக் திக் நிமிடங்களும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பதோடு, அந்த வீடியோ இணையத்தில் பலரது பார்வைகளையும் பெற்று வருகிறது.