X நிறுவனமானது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிக்கு இணையாக வளர்ந்து வந்த நிலையில் தற்போது கடந்த சில மாதங்களாக பின்னடவை சந்தித்து வருகிறது. இதனால் x நிறுவனம் ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் செயலில் உள்ள அம்சங்களை போல எக்ஸ் தளத்தில் உள்ள பயனர்களுக்கும் கூடுதல் அம்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தின் மூலமாக ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ காலில் பேசும் படியான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ios பயனர்களுக்கு மட்டும்தான் இந்த வசதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.