ரிலையன்ஸ் ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்காக மேலும் இரண்டு புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இருந்தாலும் இவை கூடுதல் டேட்டா பயன்பாட்டுக்கான டேட்டா பூஸ்டர் திட்டம் ஆகும். இவற்றின் விலை 101 ரூபாய் மற்றும் 251 ரூபாய் என ஜியோ நிர்ணயம் செய்துள்ளது. இதில் 101 திட்டம் நூறு ஜிபி டேட்டாவையும், 251 ரூபாய் திட்டம் 500 ஜிபி டேட்டாவையும் வழங்குகின்றது. இந்த திட்டங்களுக்கு சிறப்பு காலாவதி தேதி என எதுவும் கிடையாது. இதற்கு அடிப்படைத் திட்ட கட்டணமும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.