உத்தரப்பிரதேசத்தில் பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த டம்பர் லாரி ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. மோதியதோடு நிற்காமல், அந்த ஆட்டோவை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை லாரி தரதரவென இழுத்துச் சென்றது.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின்போது, ஆட்டோவில் இருந்த பயணிகள் ஒவ்வொருவராகச் சாலையில் தூக்கி வீசப்படும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

“>

இந்த விபத்தின்போது ஆட்டோவில் இருந்த பயணிகள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய டம்பர் லாரி ஓட்டுநர், விபத்துக்குப் பின் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றதே இவ்வளவு தூரம் ஆட்டோ இழுத்துச் செல்லப்படக் காரணம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சாலைப் பாதுகாப்பில் ஓட்டுநர்களின் கவனக்குறைவு எந்தளவுக்கு ஆபத்தானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.