ராமநாதபுரம் மாவட்டத்தில்  தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ்கனி எம்.பி. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் மாவட்ட ஆட்சியர் விஷ்னு சந்திரன் தள்ளிவிடப்பட்டார். இந்நிலையில் அரசு விழாவில் ஆட்சியர் விஷ்ணு சந்திரனை தள்ளிவிட்ட எம்.பி. உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனியின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் மற்றும்  எம்.பி இடையே ஏற்பட்ட மோதலில் ராமநாதபுரம் ஆட்சியர் கீழே  தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.