இயற்கையின் அபூர்வ தருணங்களை பதிவு செய்யும் காணொளிகள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் வேட்டையாடும் மற்றும் இரையாகும் விலங்குகளுக்கிடையிலான தாக்குதல்கள் பெரும்பாலும் பார்‌வையாளர்களை மிரள வைக்கும். ஆனால் சமீபத்தில் வைரலாகும் ஒரு வீடியோ, எதிர்பாராத முடிவால் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இந்த வீடியோவில், உலகின் மிக ஆபத்தான சகொமோடோ டிராகன் மற்றும் ஒரு ஆட்டுக்கிடையிலான வேட்டையாடும் போராட்டம் இடம்பெறுகிறது. ஆனால், வழக்கமான முடிவுக்கு மாறாக, இந்த முறை ஆடு கொமோடோ டிராகனை வெற்றிகரமாக தவிர்த்து தப்பியுள்ளதுதான் குறிப்பிடத்தக்கது.

 

20 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், கொமோடோ டிராகன் தனது நீண்ட வாலால் முதலில் ஆட்டைக் காயப்படுத்த முயற்சிக்கிறது. பின்னர் அதனைத் துரத்துகிறது. உயிர் தப்பிக்க முயன்ற ஆடு, அதனைச் சமாளித்து ஓடுகிறது. கொமோடோ டிராகன்கள் வேகமாக ஓட இயலாது என்பதால், அந்த ஆடு நழுவி தப்பியதாகக் காணப்படுகிறது.

இந்த வீடியோவை @naturelife_ok என்ற சமூக ஊடக பயனர் பகிர்ந்துள்ளார். அதில், “கொமோடோ டிராகன்கள் இவ்வளவு வேகமாக ஓடுமென்று எனக்குத் தெரியாது. அது எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது 58,000 முறைக்கும் மேல் பார்வைகள் பெற்று, நூற்றுக்கணக்கான விருப்பங்களையும், பல்வேறு பயனர்களின் எதிர்வினைகளையும் பெற்றுள்ளது.

மேலும் ஒருவர், “இந்த ஆடு இன்று ஒரு ஹீரோவாகிப் போய்விட்டது. கொமோடோ டிராகனிடமிருந்து தப்பித்தது சாதனைதான்,” என பதிவிட்டுள்ளார். மற்றொரு நகைச்சுவைப் பயனர், “இந்த ஆடு உசைன் போல்ட்டையும் கூட வென்றுவிட்டது போல இருக்கிறது!” என எழுதியுள்ளார்.