பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளதால், அந்த மாநிலத்தில் அதற்குள் புதிய தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வரும் நிலையில், இன்று (திங்கள்) மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். அப்போது பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 243 தொகுதிகள் உள்ள பீகார் மாநிலத்தில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. தற்போது அந்த மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றது. மேலும் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
