கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை நிலையற்ற தன்மையுடன், ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (நவம்பர் 6) மீண்டும் அதிகரித்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,250/-க்கும், ஒரு சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹90,000/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை சவரனுக்கு ₹90,000/-ஐத் தொட்டிருப்பது வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், வெள்ளி விலையும் கிராமுக்கு ₹1 அதிகரித்து, ஒரு கிராம் ₹164/-க்கும், ஒரு கிலோ ₹1,64,000/-க்கும் விற்பனை ஆகிறது.
