பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரத்தை நிறைவேற்றாததால் மனமுடைந்த அவர், தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்தினருக்கு பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள அண்ணாமலை, பணி நிரந்தரம் என்ற முக்கிய கோரிக்கையை நிறைவேற்றாமல் வெறும் 2,500 ரூபாய் ஊதிய உயர்வை மட்டும் அறிவிப்பது ஆசிரியர்களுக்குச் செய்யும் துரோகம் என்று கூறியுள்ளார்.

சாதாரண மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் புரியாமல் ஊழலில் திளைக்கும் திமுக அரசு, இனியாவது விழித்துக்கொண்டு பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.