ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 எழுதியவர்கள் விடைத்தாள் நகல்களை இளைய தல முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் இரண்டு தாள்களைக் கொண்ட தேர்வு நடைபெற்றது.

அதில் முதல் தாள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில் இரண்டாம் தாள் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்நிலையில் டெட் தேர்வு இரண்டாம் தாள் தேர்வு எழுதிய பட்டதாரிகளின் விடைத்தாள் நகல்களை டிஆர்பி தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்களின் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் நகல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.