மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ‘10 தோல்வி பழனிசாமி’ என்று அழைப்பதைப் போல, தமிழிசையை ‘6 தோல்வி தமிழிசை’ என்று அழைக்கலாம் என அவர் கிண்டலடித்தார்.
தெற்கு, வடக்கு என எல்லாத் தொகுதிகளிலும் மாறி மாறி போட்டியிட்டாலும், மக்கள் அவரைத் தொடர்ந்து நிராகரித்து வருவதாகக் குறிப்பிட்ட உதயநிதி, “அவருக்குத் தேர்தல் அரசியலை விட கவர்னர் பதவிதான் சரியாக இருக்கும்” என்று சாடினார். எனவே, இந்தத் தேர்தலிலும் அவரை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார். உதயநிதியின் இந்த அதிரடிப் பேச்சு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
