காரைக்குடியில் நடைபெற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் அவர்களைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசினார். “அண்ணன் சிதம்பரம் அவர்கள் என்ன கருத்து சொல்கிறார் என்பதை நான் எப்போதும் கூர்ந்து கவனிப்பேன்.

பல்லாண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த அவரின் பாராட்டை நான் மிகவும் முக்கியமாகக் கருதுகிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். கூட்டணியைத் தாண்டி இருவருக்கும் இடையே இருக்கும் அந்த நீண்ட கால நட்பும், ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள மரியாதையும் இந்த உரையின் மூலம் வெளிப்பட்டது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.