திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு, தவெக தலைவர் விஜய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசினார். “விஜய் என் தம்பி, அவர் எங்கு இருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்திய அவர், விஜய்யின் அரசியல் வருகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.
மேலும், அவர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்ததுதான் தனக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், விஜய்யை தான் ஒருபோதும் அரசியல்வாதியாகப் பார்த்ததில்லை, தனது தம்பியாகவே பார்க்கிறேன் என்றும் உருக்கமாகக் கூறினார்.
