செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறார் என்பதை மிகவும் ஓப்பனாக வெளிப்படுத்தியுள்ளார். நீங்கள் அரசியலுக்கு வரவேண்டுமா அல்லது வரக்கூடாதா என்பது குறித்து ரஜினி சாருடன் எப்போதாவது ஆலோசித்துப் பேசினீர்களா என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இந்தக் கேள்விக்கு மிகவும் பணிவோடும் நெகிழ்ச்சியோடும் பதிலளித்த லாரன்ஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் ஆசீர்வாதம் இல்லாமல் தான் தனது வாழ்க்கையில் எந்த ஒரு புதிய காரியத்தையும் செய்ய மாட்டேன் என்று மிகத் தீர்க்கமாகத் தெரிவித்துள்ளார். ​மேலும், கண்டிப்பாக அவருடைய ஆசீர்வாதத்தோடு தான் தான் எல்லாவற்றையும் செய்து வருகிறேன் என்றும், தனது அரசியல் வருகை குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகளிலும் அவரது வழிகாட்டுதல் இருக்கும் என்றும் லாரன்ஸ் போட்டுடைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் தான் எடுக்கப்போகும் அரசியல் முடிவை முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்குப் பிறகு, ரஜினி சார் உட்படத் தமிழகத்தில் இருக்கும் அனைத்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சென்று சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளார். அப்படிப் பெரியவர்கள் எல்லோரையும் நேரில் சந்தித்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதுதான் தனது திட்டம் எனக் கூறி, தனது குரு பக்தியால் ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களையும் லாரன்ஸ் நெகிழ வைத்துள்ளார்.