தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவதன் பின்னணி என்ன என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் மிகவும் ஓப்பனாகவும் அதிரடியாகவும் பதிலளித்துள்ளார். தவெக அரசை அவர்கள் அப்படி விமர்சனம் செய்வதற்குப் பின்னால் இருக்கும் ஒரே காரணம் பொறாமை தான் என்று லாரன்ஸ் மிக ஓப்பனாக உடைத்துப் பேசியுள்ளார்.
மேலும், அடுத்தவர்களைப் பார்த்து விமர்சனம் செய்வதற்கு முன்னால், அந்தப் பொறுப்பில் இருக்கும்போது நாம என்ன செஞ்சோம், மக்களுக்கு என்ன நன்மைகளைச் செய்தோம் என்று விமர்சிப்பவர்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும் எனத் தனது பாணியில் கறாரான நெத்தியடியைக் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தவெக கட்சியின் சார்பில் அவர் ‘திருச்சி கிழக்கு’ சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அரசியல் வட்டாரத்தில் வெளியாகும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த லாரன்ஸ், தான் முதன்முதலில் அரசியலுக்கு வருகிறேனா இல்லையா என்கிற விஷயத்தையே இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும், அதைத் தனது தாய் முன்னிலையிலும் ரசிகர்கள் முன்னிலையிலும் கூடிய சீக்கிரம் அறிவிக்கப் போவதாகவும் கூறினார். அந்தப் பெரிய அறிவிப்பை வெளியிட்டதற்குப் பிறகுதான், தான் எந்தத் தொகுதியில் போட்டி போடப் போகிறேன் மற்றும் தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்துப் பேச முடியும் எனக் கூறி செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்துள்ளார்.
