தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு எதிராக ஆரம்பத்திலேயே வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களுக்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அசல் பாணியில் ஒரு மாஸான தத்துவத்தை உதாரணமாகக் கூறி நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார். நாம ஒரு புதிய வாடகை வீட்டுக்குக் குடிபோகும்போது ஓனர் சாவி கொடுப்பார், வீடு பார்க்க ரொம்ப நல்லாத்தான் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஆனால் அந்த வீட்டுக்குள்ளே குடிபோய் வாழ்ந்து பார்த்த பிறகுதான் ஃபேன் சுத்தவில்லை, பைப் ஒழுகுது, பெயிண்ட் கொட்டுது போன்ற குறைகள் ஒவ்வொன்றாகத் தெரியவரும் என விளக்கியுள்ளார்.
ஒரு சின்ன வாடகை வீட்டுக்கே இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, ஒரு பெரிய நாட்டையே புதுசாக ஒருத்தரிடம் கொடுத்திருக்கும் போது, ஆரம்பத்திலேயே குறைகளை மட்டும் தேடுவது நியாயமில்லை என்று லாரன்ஸ் தவெக அரசுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல், ரோட்டில் இருக்கும் தெருநாய் கூட புது ஆளைப் பார்த்தால் ஆரம்பத்தில் கத்தத்தான் செய்யும் என்றும், அது கத்தாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்குப் பிடித்த பிஸ்கட்டோ அல்லது பிரியாணியோ போட வேண்டும் என்றும் தனது பாணியில் கறாரான ஒரு பஞ்ச் தத்துவத்தை உடைத்துள்ளார்.
ஒரு சிறிய வீட்டுக்கே இவ்வளவு விஷயங்களைச் சரி செய்யக் கொஞ்சக் காலம் தேவைப்படும்போது, தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை விரும்புபவர்கள் தவெக அரசுக்குக் கொஞ்சமாவது டைம் கொடுக்க வேண்டாமா எனச் செய்தியாளர்கள் முன்னிலையில் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக அரசை அவசரப்பட்டு விமர்சிப்பவர்களின் வாயை அடைக்கும் விதமாக லாரன்ஸ் பேசியுள்ள இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது.
