ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
வலைப் பயிற்சியின் போது வைபவ் காட்டும் வேகம் மற்றும் துணிச்சலைக் கண்டு இந்திய அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவே வியந்து போயுள்ளார்.
இது குறித்து ஜடேஜா கூறுகையில், “வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிராக வலைப் பயிற்சியின் போது ஸ்டம்புகளை நோக்கி பந்து வீசுவதே மிகக் கடினமான காரியம். ஏனெனில் அவர் ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு விளாசக் கூடிய திறமை கொண்டவர்.
அவரிடம் பயம் என்பது துளி கூட கிடையாது. மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் எவ்வளவு தைரியமாக விளையாடுகிறாரோ, அதே போன்ற ஆக்ரோஷத்தைத்தான் வலைப் பயிற்சியின் போதும் காட்டுகிறார்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அனுபவ வீரரான ஜடேஜாவே ஒரு இளம் வீரரின் தன்னம்பிக்கையைப் பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் “வருங்கால சூப்பர் ஸ்டார் தயார்” என ரசிகர்கள் வைபவ் சூர்யவன்ஷியை கொண்டாடி வருகின்றனர்.
