நடிகர் ரவிமோகன் பிரஸ்மீட்டில் “மூன்று எழுத்து இட்லி நடிகைதான் தன் குடும்பத்தைக் கெடுத்தார்” என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், நடிகை குஷ்பு தனது எக்ஸ் (X) தளத்தில் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “சிலர் தங்கள் மரபணுவை நிரூபிப்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள்” என்று அவர் தனது பதிவில் மிக ஸ்ட்ராங்காகக் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், “நான் சொல்வது சரிதான் என்பதை நிரூபித்ததற்கு நன்றி” என்றும் குஷ்பு அதில் பதிவிட்டுள்ளார். ரவிமோகனின் பரபரப்பான பேட்டிக்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள இந்த ட்வீட், தற்போது சோசியல் மீடியாவில் அடுத்த கட்டப் புயலைக் கிளப்பியுள்ளது.