ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பெரும் புயலைக் கிளப்பி வரும் நிலையில், தற்போது ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவிற்குப் பிரபல நடிகையும், அரசியல் பிரமுகருமான குஷ்பூ சுந்தர் அவர்கள் பகிரங்கமாகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ஆர்த்தி தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, உணர்வுப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவின் கீழ் நடிகை குஷ்பூ கமெண்ட் செய்து, ஆர்த்தியின் தைரியத்தைப் பாராட்டியுள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஆர்த்தியைப் பாராட்டி குஷ்பூ விடுத்துள்ள அந்த கமெண்ட்டில், “ஒரு தாயிடம் எப்போதும் விளையாடாதீர்கள். தனது குட்டிகளுடன் இருக்கும் சிங்கத்தைப் போன்றவர் நீங்கள். உங்களுக்கு இன்னும் அதிக சக்தியும் தைரியமும் கிடைக்கட்டும் ஆர்த்தி” என்று மிக ஆக்ரோஷமாகவும், ஆதரவாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜெயம் ரவி – ஆர்த்தி பிரிவுக்குப் பின் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அமைதி காத்து வந்த நிலையில், குஷ்பூ ஓப்பனாக ஆர்த்திக்குச் சப்போர்ட் செய்துள்ள இந்த கமெண்ட் ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது எக்ஸ் (X) தளத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.
