தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடிப் புயலாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நெருங்கிய தோழியும் பிரபல முன்னணி நடிகையுமான த்ரிஷா களம் இறங்கப்போவதாக வெளியாகி வரும் தகவல் கோட்டை வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் த்ரிஷா போட்டியிட்டு வெற்றி பெறும் பட்சத்தில், ஓராண்டுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் மெகா அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அவருக்கு மகளிர் நலத்துறை அல்லது வேறு ஏதேனும் ஒரு முக்கியத் துறை ஒதுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தவெக உள்கட்சி வட்டாரங்களில் பலத்த பேச்சு கிளம்பியுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெகவின் முதல் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 10 அமைச்சர்களின் இலாகாக்கள் (Portfolios) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், த்ரிஷாவின் இந்த திடீர் அரசியல் என்ட்ரி செய்தி ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் உற்று நோக்க வைத்துள்ளது.
