செய்தியாளர்கள் சந்திப்பில் அடுத்தடுத்த அதிரடிகளை உடைத்த நடிகர் ரவிமோகன், “அந்தக் குடும்பம் வேண்டாம் என்று என் அப்பா, அம்மா என் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டார்கள்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார். திருமணத்தின் போது தனக்கு அட்சதை போடும் போதே, மனமில்லாமல் “நாசமா போ” என்றுதான் போட்டார்கள் என்று அவர் மேடையில் மிக ஓப்பனாகப் பேசியுள்ளார்.

​ஃபெமினிசம் பற்றிப் பேசுபவர்களைச் சாடிய அவர், “நீ Feminist-னா நான் வேலைக்கு போவேன்-னு சொல்லிட்டு வேலைக்கு போக வேண்டியதுதானே” என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். விவாகரத்து விவகாரத்தில் தன் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நடந்த இந்தத் திருமணம் குறித்து அவர் பேசிய வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.