நடிகர் ரவிமோகனின் பரபரப்பான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அவருடைய மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உண்மை எப்போதும் வெல்லும்” என்று அதிரடியாகப் பதிவிட்டுள்ளார். “என்னுடைய கண்ணியமான அமைதியை யாரும் பலவீனம் என்று தவறாக நினைக்கக் கூடாது” என்று அவர் மிக ஸ்ட்ராங்காகக் குறிப்பிட்டுள்ளார்.
தன் பிள்ளைகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக, தான் எப்போதும் உண்மையோடு இந்த உலகத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஆர்த்தி தெரிவித்துள்ளார். ரவிமோகனின் ஆவேசப் பேட்டிக்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே மனைவி ஆர்த்தி கொடுத்துள்ள இந்த பதிலடி, தற்போது சோசியல் மீடியாவில் அடுத்த கட்டப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
