மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் ரவிமோகன் செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். “என்னை அடிமையாக வச்சிருந்தாங்க, அந்த வாழ்க்கை வேண்டாம்னுதான் தெறித்து ஓடி வந்தேன்” என்று அவர் ஆக்ரோஷமாகக் குமுறியுள்ளார். கையை அறுத்துக்கொண்டு மிரட்டித்தான் ஆர்த்தி தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

​23 வருடம் உழைத்தும் இன்று தான் வாடகை வீட்டில் வசிப்பதாகவும், அவர்கள் கோடிக்கணக்கில் வச்சுக்கொண்டு வாழ்கிறார்கள் என்றும் ரவிமோகன் வேதனைப்பட்டுள்ளார். தன் பிள்ளைகளைத் தன்னை பார்க்க விடுவதில்லை என்றும், பள்ளிக்குக் கூட பாதுகாவலர்களுடன் அனுப்புகிறார்கள் என்றும் அவர் கண்ணீருடன் சாடியுள்ளார். தனுக்கு ஆதரவாக நின்ற தோழி கெனிஷாவையும் காலி செய்து அனுப்பிவிட்டார்கள் என்று கூறிய அவர், தனிப்பட்ட வாழ்க்கையைச் சுத்தம் செய்யும் வரை நடிக்கப் போவதில்லை என்று கிரிஸ்ப்பா அறிவித்துள்ளார்.