காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், அரசியல் கட்சிகள் எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சித்துக் கொள்ளலாம், ஆனால் வாக்களித்த தமிழக மக்களை யாரும் அவமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் மிகவும் அரசியல் பக்குவமும் ஞானமும் கொண்டவர்கள் என்றும், அவர்கள் சிந்தித்துத்தான் தங்களது ஜனநாயக ஆணையை வழங்கியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்கள் கட்சிக்கு எதிராக வைக்கப்பட்ட தனிப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கவே தாங்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் முக்கியப் பதவிகளையும் அதிகாரத்தையும் அனுபவித்துவிட்டு, 2014 மக்களவைத் தேர்தலில் செய்த மாபெரும் துரோகத்தை நினைவூட்ட தங்களால் முடியும் என்றாலும், தாங்கள் அப்படிச் செய்யவில்லை என்று கிரிஷ் சோடங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக வரலாற்றில் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என்று தெரிந்திருந்தும், வெற்றி வாய்ப்புக்காகவே கூட்டணியில் இணைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் தீர்ப்பைப் பணிவுடனும் பெருந்தன்மையுடனும் மதிப்பதே காங்கிரஸின் கொள்கை என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
