தமிழ் சினிமாவில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அறம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோபி நயினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இயக்குனர் கோபி நயினார் மனுஷி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் நிலையில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.

அறம் படத்தை போன்று மனுஷி படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் மனுஷி படத்தின் டிரைலர் வீடியோவை நேற்று நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இந்த டிரைலரை பார்க்கும்போது சமூகப் பிரச்சினைகளை பேசும் கதையாக மனுஷி அமைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.