அர்ஜென்டினாவில் கார் போர்டா பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது டாக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. சில வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் குலுங்கியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த எந்த விதமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.