இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி மீது அமெரிக்கா பல குண்டுகளை வீசியது. அந்த குண்டுகள் எல்லாம் வெடிக்காமல் பூமிக்கு அடியில் புதைந்து இருந்த நிலையில் தற்போது அவை கண்டெடுக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியின் மேற்கு பகுதியில் எஸ்.எம் நகரில் புணரமைப்பு பணிகளுக்காக குழி தோண்டிய போது 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஜெர்மனி ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த வெடிகுண்டை பத்திரமாக அகற்றியுள்ளனர். சுமார் 500 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்ற காரணத்தினால் மிகுந்த எச்சரிக்கையுடனும், உரிய பாதுகாப்புடனும் அந்த குண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.என் மற்றும் அதன் அருகே உள்ள ஓவர் ஹவுஸ் ஆகிய இரண்டு நகரங்களில் இருந்து 3,300 -க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.