பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் 100-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் காரில் பயணம் செய்தபடி வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில்  சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்த படி சமூக வலைத்தளங்களில் அவர் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த வீடியோ வைரலாக பரவிய உடன் பிரதமரே  இவ்வாறு சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றதற்கு பலரும் விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதுக்காக ரிஷி சுனக்  மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கிடையே அணியாமல் சென்றதற்காக அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கபட்டுள்ளது.