தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் மாரி தங்கம்(24). இவர் கடந்த ஜூன் 1-ம் தேதி சிப்காட் பகுதியில் வைத்து, ஒரு நபரை அறிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். இவரைப் போன்று அம்பேத்கர் நகரை சேர்ந்த சந்திரன்(21) என்பவரும் ஜூன் 17ஆம் தேதி அதே சிப்காட் பகுதியில் வைத்து ஒருவரிடம் அறிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
எனவே இருவரின் மீதும் சம்பந்தப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் மாரிதங்கம் மற்றும் சந்திரன் இருவரையும் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்குகளின் கீழ் கைது செய்தனர்.
பின்பு கைது செய்யப்பட்ட இருவரையும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
