நெல் மகசூல் குறைந்துள்ளதால் தமிழகத்தில் அனைத்து ரக அரிசியின் விலை கிலோவுக்கு 12 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. காவிரி டெல்டாவில் குருவை, சம்பா மற்றும் தாளடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். போதிய மழை இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு மகசூல் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ 12 ரூபாய், ஐந்து கிலோ அறுபது ரூபாய், 10 கிலோ 120 ரூபாய் , 25 கிலோ 300 ரூபாய் வரை அரசு விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நீடிக்கும் என்பதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.