முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நடிகர் விஜய்யைப் பார்த்து திமுக பயப்படுகிறதா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், கமல்ஹாசனின் திரைப்பட வசனமான “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதை மேற்கோள் காட்டி திமுகவை விமர்சித்தார். திமுகவினர் தற்போது ஒருவிதமான பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சாடினார்.

​அண்ணாமலை பேசும்போது, “திமுகவினருக்கு யாரைப் பார்த்தாலும் பயம் வந்துவிடுகிறது; வேல் பார்த்தால் பயம், முருகனைப் பார்த்தால் பயம், சிவனைப் பார்த்தால் பயம், பாஜக மற்றும் இந்து முன்னணியைப் பார்த்தால் பயம், ஏன்… யாராவது நெற்றியில் பொட்டு வைத்திருப்பதைப் பார்த்தால் கூட அவர்களுக்குப் பயம் வருகிறது” என்று ஒவ்வொரு பாயிண்டிற்கும் கையைத் தட்டி ஆவேசமாகப் பதிலளித்தார்.

அந்த வரிசையில் இப்போது விஜயைப் பார்த்தும் அவர்கள் பயப்படுகிறார்கள் என்றும், மொத்தத்தில் திமுகவினர் அரண்டு போய் ஒரு இருண்ட உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கிண்டலாகத் தெரிவித்தார்.