தமிழகத்தில் அரசு விரைவு பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த மூன்று பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பரிசை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர இதர நாட்களில் முன்பதிவு செய்து அரசு பேருந்தில் பயணிப்பதை ஊக்குவிக்கும் விதமாக மாதம்தோறும் மூன்று பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இசக்கி முருகன், சீதா மற்றும் இம்தியாஸ் ஆரிப் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டன.