ராமேஸ்வரம் – தனுஷ்கோடி சாலையில் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்த நிலையில், அதற்குப் பின்னால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் காரை திடீரென வழிமறித்து நிறுத்தியுள்ளனர். மேலும், இந்தச் சாலை வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதி என்று கூறி காரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த கேரள வாகன ஓட்டி, போலீசாருடன் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
View this post on Instagram
தனது காருக்கு முன்னால் சென்ற அரசுப் பேருந்தை சுட்டிக்காட்டிய காரோட்டி, “இவ்வளவு பெரிய பேருந்து முன்னால் செல்கிறதே, அது எப்படி நோ எண்ட்ரி பகுதியாக இருக்க முடியும்?” என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர், “அது அரசுப் பேருந்து” என்று சாதாரணமாகப் பதில் அளித்துள்ளார். போலீசாரின் இந்த பதிலால் மேலும் ஆவேசமடைந்த கேரள வாகன ஓட்டி, “அரசுப் பேருந்துக்கு ஒரு சட்டம், மற்ற பொதுமக்களின் வாகனங்களுக்கு ஒரு சட்டமா?” என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். டிராபிக் போலீசாரின் இந்த பாரபட்சமான அணுகுமுறையை காரில் இருந்தபடியே அந்த நபர் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது.
